ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி நடிக்கும் “ சவுகார்பேட்டை “

sowharpettaiமாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “

ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் “ பேகம் பேட்டா “ ஹிந்தியில் “ தந்திர சக்தி “ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.
மற்றும் சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன்,மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் – துரை.P.G/ இசை- ஜான்பீட்டர்
ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
கலை – எஸ்.எஸ்.சுசி தேவராஜ்
நடனம் – தினேஷ், ராபர்ட் / ஸ்டன்ட் – கனல்கண்ணன்
எடிட்டிங் – எலிசா / தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்
தயாரிப்பு – ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்… இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும்..பேய் கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும் என்றார் வடிவுடையான். செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது சவுகார்பேட்டை.