லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்!

lashmiநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இவர் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம் சந்திப்போம், திருதிரு துறுதுறு, ஈரம், நாடோடிகள், பாஸ் என்கிற பாஸ்கரன், ரவுத்திரம், சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

‘ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். தற்போது ‘நெருங்கிவா முத்தமிடாதே’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை என்ற டி.வி. நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருகிறார்.

இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்மஆசாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளான். டி.வி. நிகழ்ச்சியில் சர்ச்சையான விஷயங்களை அவர் அலசுவதால் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க அவரது கணவர் ராமகிருஷ்ணன் நேற்று கமிஷனர் அலுவலகம் வந்து இருந்தார். கமிஷனரை சந்திக்க முடியவில்லை. இன்று நேரில் புகார் அளிக்கிறார்.