ரஜினி படத்தில் மகேஷ்பாபு!

rajiதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியும், தெலுங்கு திரையுலகின் ப்ரின்ஸ் மகேஷ் பாபுவும் ஒரே படத்தில் இணைய இருக்கின்றனர். மகேஷ் பாபுவின் நெருங்கிய உறவினர் சத்யநாராயண பாபு.

இவர் தமிழ், தெலுங்கில் ஒரு மல்டி ஸ்டார் படத்தைத் தயாரிக்கிறாராம். அதில்தான் ரஜினியும், மகேஷ் பாபுவும் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம். ஆனால் லிங்கா முடிந்த கையோடு ரஜினி, ஈராஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் எடுப்பது உறுதி என்றால் 2016ம் ஆண்டு தான் சாத்தியம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.