ரஜினிக்கெதிராக கன்னடர்கள் செய்த காரியம்?

49669663காவிரி நதிநீர் விவகாரத்தில் கருத்து கூறாத நடிகர் ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி உப்பு பாக்கெட்டை பார்சல் அனுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தினமும் 12,000 கன அடிவீதம் வரும் 20ம் திகதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவ பிறப்பித்தது.

இதையடுத்து, கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த விசயத்தில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை தனது கருத்தை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு இந்து மக்கள் கட்சியினர் உப்பு பாக்கெட்டுகளை ரயில்வே பார்சல் மூலம் அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.