‘மெட்ராஸ்’ இயக்குனருக்கு முத்தம் கொடுக்க விரும்பிய வெங்கட்பிரபு!

venkatஅட்டக்கத்தி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் ரஞ்சித், தனது இரண்டாவது படைப்பான ‘மெட்ராஸ்’ படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் பெரும் சந்தோஷத்தில் உள்ளார். அவருடைய செல்போனுக்கு அவரை வாழ்த்தி கால்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னை ரமணா நகரில் படமாக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் பலர் இயக்குனர் ரஞ்சித்துக்கு போன் செய்து, தங்கள் பகுதியை படத்தில் மிக அழகாக காண்பித்ததற்கு நன்றி தெரிவித்து போன் செய்தவண்ணம் உள்ளனர்.

மேலும் மங்காத்தா புகழ் இயக்குனர் வெங்கட்பிரபு, ரஞ்சித்துக்கு போன் செய்து இவ்வளவு அருமையான திரைக்கதை அமைத்த உனக்கு முத்தம் தர விரும்புகிறேன் என்று கூறியதாக ரஞ்சித் இன்று தனது சமுக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.