முரட்டு தேசம் என்ற பெயரில் தமிழில் வெளியாகும் மிஷன் இம்பாசிப்பில் ஹாலிவுட் படம்!

Photo credit: Christian Blackடாம் க்ருஸ் நடிக்ப்பில் ‘ மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் (Mission: Impossible Rogue Nation) வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் இப்படம் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் என்று தமிழில் வெளியாகவுள்ளது.

படத்தை பற்றி டாம் க்ரூஸ் கூறுகையில் “ நமக்கு நெருக்கடி நிகழும் காலங்களில் நம்முடன் யார் துணை நிற்பார் என்று நமக்கே தெரியாது. தன் குழுவை நம்பி எதிரிகளை அழிக்க ஈத்தன் ஹன்டிற்கு ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்’ எத்தகைய நண்பர்களை அளிக்கிறது என்பதுதான் கதை. வீரம் பொருந்திய எதிரிகளை வேர் அறுத்து. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி ஒன்றன் பின் ஒன்றாக சதி திட்டங்களை முறியடித்து முன்னேறுவதை ஆக்க்ஷன், காமெடி மற்றும் உணர்ச்சி நிறைந்த காட்சிகள் இடையே காதலையும் அமைத்து உருவாகியுள்ளதே ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்’.” என்றார்

மிஷன் இம்பாசிபிள் தொடர் ஈத்தன் ஹன்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் டாம் க்ரூஸ் அசகாச சண்டைகாட்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். “இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு ஸ்பெஷல் ஏஜென்ட் எப்படி நடந்துகொள்வார் என மனதில் கருத்தில் கொண்டு நடிப்பார். ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் படபிடிப்பு முழுதும் எங்களுடன் இருந்து உதவி புரிவார்.” எனக் கூறினார் ஸ்கை டான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாணா கோல்ட்பெர்க்.

ஸ்கை டான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவில் Viacom18மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடுகிறது.