மாலிவுட்டின் “லக்கி ராய்!

raiமும்பையை சேர்ந்த ASA நிறுவனம், தமிழில் பிரம்மாண்ட செலவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. பிரபல நடிகையான ராய் லக்ஷ்மி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியுடன் ராஜாதிராஜா, தமிழில் சுந்தர் சி யுடன் “அரண்மனை” என இந்த வருடம் ஹிட் படங்களில் நடித்துள்ள ராய் லக்ஷ்மி, பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் என்றால் அது மிகையாகாது.

பல மலையாள வெற்றி படங்களில் நடித்ததின் மூலம் மாலிவுட்டில் “லக்கி” ராய் என அழைக்கப்படும் ராய் லக்ஷ்மி, அரண்மனையில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு அவர் ஒரு பெரிய பலமாக திகழ்வார். இன்னும் பெயரிடபடாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.