மனசாட்சிப்படி அஜீத்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்! -சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்

Ajith-55-movie-new-stillsதமிழ் வாரஇதழ் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டது. அது அஜீத் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இணைய தளங்களில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தார்கள். அஜீத்தை தாக்கி விஜய் ரசிகர்களும், விஜய்யை தாக்கி அஜீத் ரசிகர்களும் வீடியோ கேம் வெளியிடும் அளவிற்கு நிலைமை முற்றியிருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தனது டுவிட்டரில் “அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யார் தகுதியானவர் என்றால் எனது மனசாட்சிப்படி அஜீத்துக்குத்தான் அதை அடையும் சாத்தியம் உள்ளது” என்று கூறியுள்ளார். இது எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றிய கதையாகிப்போய்விட்டது. கொஞ்சம் அமுங்கிக்கிடந்த இந்த பிரச்சினை மீண்டும் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.