மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

mahesh-babu-stills-bராவணன், கடல் படங்களைத் தொடர்ந்து நாகார்ஜூனா, மகேஷ்பாபு ஐஸ்வர்யாராய், ஸ்ருதிஹாசன் கூட்டணியை இணைத்து ஒரு படத்தை தயாரித்து இயக்கயிருந்தார் மணிரத்னம். அப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடவும் திட்டம் இருநதது.

இதுகுறித்து மணிரத்னம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அனைவருமே நடிக்க சம்மதம் தெரிவித்தனர். அதனால் கதை விவாதத்தில் இறங்கினார் மணிரத்னம். ஆனால், பின்னர் அவர்களிடம் சம்பளம் பேசும்போதுதான் பிரச்சினை ஏற்பட்டது. நாகார்ஜூனா, ஐஸ்வர்யாராய் ஆகியோர் அவர் கொடுப்பதை வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் மகேஷ்பாபு தனக்கு தெலுங்கு படங்களில் கொடுக்கப்படும் 5 கோடி சம்பளத்தை தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக சொல்லி விட்டாராம். இதனால், தனது பட்ஜெட் தாங்காது என்று மணிரத்னம் சொன்னபோது, அப்படியென்றால் என்னை விட்டு விடுங்கள் என்று எஸ்கேப்பாகி விட்டாராம். இதனால், மகேஷ்பாபு இல்லாமல் அந்த படத்தை பெரிய அளவில் வியாபாரம் செய்ய முடியாது என்பதால், அப்படத்தை மணிரத்னம் டிராப் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.