மகளை நடிகையாக்க விருப்பம் இல்லை! – ஸ்ரீதேவி

2_86_90_Sridevi Saree Photos (4)ஸ்ரீதேவி தனது மகள் ஜானவியை சினிமாவில் அறிமுகப்படுத்த போவதாக செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழில் இளம் ஹீரோக்கள் ஜோடியாக அவர் நடிப்பார் என்றும், இதற்காக பெரிய டைரக்டர்களை அணுகி ஸ்ரீதேவி வாய்ப்பு கேட்பதாகவும் கூறப்பட்டது.

ஸ்ரீதேவியுடன் படவிழாக்களில் ஜானவி பங்கேற்று வருகிறார். இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்களிடம் அறிமுகப்படுத்தவே மகளை ஸ்ரீதேவி அழைத்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு ஸ்ரீதேவி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–

‘‘என் மகள் ஜானவியை சினிமாவில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்போவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஏன் இது போன்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. ஜானவி இன்னும் படித்துக் கொண்டு இருக்கிறார். எனக்கு ஜானவியை நடிகையாக்க வேண்டும் என்று விருப்பம் இல்லை.

ஜானவிக்கு என்ன விருப்பம் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. நடிகையாக வேண்டும் என்பதற்காக படவிழாக்களுக்கு ஜானவியை அழைத்து வரவில்லை. 15 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். என் மகள்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவேதான் பொது நிகழ்ச்சிக்கு என்னுடன் வருகிறார்கள் என்றார்.