ப்ரியாஆனந்த் சரக்கு அடித்ததை நியாயப்படுத்திய இயக்குனர்!

anad_shankar001சமீபத்தில் திரைக்குவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அரிமாநம்பி. இப்படத்தின் முதல் காட்சியிலேயே ப்ரியா ஆனந்த் சரக்கு அடிப்பதுபோல் ஒரு காட்சி வருகிறது.

இக்காட்சி பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் ஒரு தமிழ் பொண்ணு இப்படி குடிக்கிற மாதிரி சீன் வைக்கணுமா என்று கேட்டதற்கு, இயக்குனர் சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதற்கு அவர் ‘ஆணுக்கு பெண் சமம்னு சொல்றோம், எழுதுறோம். ஆனால் நிஜத்தில் சமமாக இருக்க அனுமதிக்க மாட்டேங்குறோம். அவங்களும் சமம்தான்னு சொல்றதுக்காகதான் அப்படியொரு காட்சியை வைத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.