புறம்போக்கு தலைப்பு மாற்றம்!

d73debe3-e137-4a2d-80f3-02db04b28a09_S_secvpfபேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு, மற்றும் குலுமனாலியில் நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக ஜெயில் செட் போடப்பட்டு அதில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புறம்போக்கு படத்தின் தலைப்பை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திருத்தம் செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. புறம்போக்கு என்ற தலைப்புடன் பொதுவுடமை என்ற வார்த்தையை சேர்த்து ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்று மாற்றி உள்ளார்.

“நம் நாட்டில் புறம்போக்கு என்று எதுவும் இல்லை. எல்லாமே பொது நிலம், மக்கள் நிலம். நாம்தான் அதனை நம் வசதிக்கேற்ப விளைச்சல் புறம்போக்கு, பாசன புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு என்று பிரித்து வைத்திருக்கிறோம். எனவே புறம்போக்கு என்பது ஊருக்கு பொதுவான இடம் என்று அர்த்தம். அதனால்தான் தலைப்பை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று இயக்குனர் தரப்பில் கூறப்படுகிறது.