பிரபுதேவாவுக்கு பெண் துணை தேவையில்லையாம்!

prabu
நடிகர், நடன மாஸ்டராக இருந்தபோது, தனது நடன குழுவில் இருந்த ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் பிரபுதேவா. ஆனால், சில குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டது. அதனால், பினனர் நயன்தாராவுடன் பழகினார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாரானபோது, டமார் என்று அவர்கள் காதல் பலூன் வெடித்து சிதறியது.

இதனால், இருவரும் என்ன காரணமென்று சொல்லாமலேயே பிரிந்து விட்டனர். இதையடுத்து இந்தி படங்களை இயக்கியபடி மும்பையிலேயே முகாமிட்டுள்ளார் பிரபுதேவா. இந்த நேரத்தில் அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் இதுபற்றி பிரபுதேவா விடுத்துள்ள செய்தியில், சமீபகலமாக பெண்கள் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் கடந்த சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வருகிறேன். இனிமேல் எனது வாழ்க்கையில் எந்த பெண் துணையும் எனக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.