பாரதிராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த விமல்!

bharathiraja-as-vishal-s-father-in-pandianadu-39e63aa9ஒரு காலத்தில் கல்லைகூட நடிக்க வைத்தவர் பாரதிராஜா. அவரது படத்தில் ஒரு சீனில் தலைகாட்ட சான்ஸ் கிடைக்காதா என்று ஏங்கிய நடிகர்-நடிகைகளும் உண்டு. ஆனால், இன்றைக்கு காலம் மாறி விட்டது. பாரதிராஜாவின் கொடியும் இறங்கி விட்டது. கடைசியாக அவர் இயக்கிய அன்னக்கொடி ப்ளாப்பானதை அடுத்து அவர் மீது கொஞ்ச நஞ்சம் வைத்திருந்த நம்பிக்கைளும் தவிடிபொடியாகி விட்டது.

இந்த நிலையில், மீண்டும் ஒரு படம் இயக்க கொஞ்ச நாளாகவே தயாராகிககொண்டிருக்கிறார் பாரதிராஜா. அதில், யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனையும் அவருக்குள் ஓடிக்கொண்டிருக்க, மஞ்சப்பை படத்தில் விமலின் நடிப்பைப்பார்த்து வியந்து போனவர், அவரை வஞ்சணையில்லாமல் பக்கம் பக்கமாக புகழ்ந்திருக்கிறார்.

அதையடுத்து, நான் இயக்கும் படத்தில் நீதான் ஹீரோ என்றாராம் பாரதிராஜா. அதைக்கேட்டு ஆடிப்போனாராம் விமல். இப்போது இருககிற நிலையில் இவர் படத்தில் நடித்தால் இருக்கிற மரியாதையும் அவுட்டாகி விடும் என்று, இன்னும இரண்டு வருடத்துக்கு நான் பிசி என்று கப்சா விட்டு நழுவிக்கொண்டாராம்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாரதிராஜா, விமல்கூட என் படத்துல நடிக்க மாட்டேங்கிறானே. நான் என்ன அவ்ளோ கேவலமாவா படம் எடுக்கிறேன் என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.