பல சரித்திரங்கள் சிறைச்சாலையில்தான் அரங்கேறி உள்ளன! -இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்

sp.jananathanசமுதாயத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டும் கதை அம்சம் உள்ள படங்கள் என்றுமே இயக்குனர் ஜனநாதன் உடைய பெரும் பலமாகும்.அவரது binary pictures மற்றும் யு டி வீ motion pictures இணைந்து வழங்கும் ‘புறம்போக்கு’ அத்தகைய ஒரு கதை அம்சம் கொண்ட படமாகும். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் , மற்றும் கார்த்திகா என நட்சத்திர குவியலாக திகழும் இந்த படம் துரித வேகத்தில் படமாக்கபடுகிறது. ‘புறம்போக்கு’ படத்தை பற்றி சில கருத்துகளை பகிர்ந்துக் கொள்கிறார் இயக்குனர் ஜனநாதன்.

‘சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல.. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறை சாலையில்தான் அரங்கு ஏறி உள்ளது. மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைசாலையில் இருந்துதான் தங்களது வெற்றி சரித்திரத்தை துவங்கினர். சிறை சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரமாகவே இருந்து உள்ளது என்றால் மிகை ஆகாது.என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்தரத்தில் இருந்து எடுக்க பட்டது தான். சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து , பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுக படுத்தியவருமான மெக்கலேவின் பெயர் ஷ்யாமுக்கும், மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்டபட்டு உள்ளது.

கலை இயக்குனர் செல்வகுமாரின் கைவண்ணத்தில் உருவான அந்த பிரம்மாண்டமான சிறைசாலை அரங்கின் , ஒவ்வொரு சதுரத்தையும் தனது நேர்த்தியான ஒளிபதிவு மூலம் படமாக்கி உள்ளார் ஒளிபதிவாளர் எக்கம்பரம். தொழில் நுட்ப தேவைகளுக்கு சிறிதும் தயங்காமல் , படத்தின் தரமே முக்கியம் என உறுதுணையாக இருந்த யு டி வி நிறுவனத்துக்கும் நன்றி ‘ என கூறினார் இயக்குனர் ஜனநாதன்.