நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ‘நதிகள் நனைவதில்லை’

ss‘வாழ்க்கையை வியாபரமாக, பிள்ளைகளை வருமானமாக பார்க்கிற பெற்றோர்கள், குழந்தைகளை பெற்று தள்ளுவதை விட தென்னம் பிள்ளைகளை நட்டு வைத்தால் கொள்ளை லாபம் கிடைக்கும். உயர்ந்த பண்பும், அன்பும் உடையவர்களின் எண்ணங்கள் தான் நனவாகும். சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும், சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்’’ இது போன்ற கருத்துக்களை வைத்து ‘சரஸ்வதி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நதிகள் நனைவதில்லை’. ‘காமராசு’, ‘அய்யாவழி’ படங்களை இயக்கி, தயாரித்த நாஞ்சில் பி.சி.அன்பழன் இயக்கி, தயாரித்துள்ள இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் பிரணல், மோனிகா, நிசா, காயத்ரி, கல்யாணி, சரிதா, செந்தில், பாலாசிங், மதுரை முத்து, சிங்கமுத்து, குண்டு கல்யாணம் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை கார்த்திக் ராஜா ஏற்றிருக்க, சௌந்தர்யன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு குமரி மாவட்டத்திலுள்ள இயற்கை எழிலான இடங்களில் நடந்துள்ளது.