நந்திதாவை கலாய்த்த விமல்!

Anjala-Movie-Stills-5-660x300அட்டகத்தி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சல’. இதில் இவர் விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விமல், நந்திதா, இயக்குனர் தங்கம் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் நந்திதா பேசும்போது, ‘அஞ்சல’ படம் எனக்கு ஆறாவது படமாக நடிக்க தொடங்கினேன். இதில் விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது நான் தமிழில் பேச மாட்டேன். தமிழில் பேசினால் விமல் என்னை கலாய்ப்பார். அதனால் நான் எப்போதும் படப்பிடிப்பில் இங்கிலீஸில்தான் பேசினேன்.

எனக்கு வி எழுத்து ராசி. வி எழுத்தில் ஆரம்பிக்கும் நடிகர்களான விஜய் சேதுபதி, விஷ்ணு, விஜய் ஆகியோருடன் நான் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறது. அதுபோல் தற்போது விமல் படத்தில் நடித்திருக்கிறேன். இப்படமும் வெற்றி பெறும்.

இப்படம் டீக்கடையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் டீக்கடை முக்கிய பங்கு வகிக்கும். இயக்குனர் தங்கம் சரவணன், படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். ‘அஞ்சல’ படம் எனக்கு பெயர் சொல்லும் படமாக அமையும்’ என்றார்.