நடு ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆரி- மாயா!

kaசிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் நடந்த ஒரு சமீபத்திய நிகழ்வு அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பசுமை பொங்கும்,அமைதியான இந்த ஊரில் சமீபத்தில் ஒரு நாள் நடு ரோட்டில் ஒரு அழகான இளம் பெண்ணும், இளைஞனும் மோதிக் கொண்டார்கள். முதலில் வாய் சண்டையாக இருந்த இந்த சண்டை போக போக உக்கிரமாகி , அந்த இடத்தையே ஒரு போர் களமாக்கி விட்டது. எதோ சின்ன பசங்க சண்ட போட்டுக்குறாங்க என்று அலட்சியமாக இருந்த ஊர் மக்கள், சண்டையின் வீரியத்தை பார்த்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றுக் கூட யோசிக்க துவங்கினர்.அந்த நேரத்தில் ‘Cut’ என்று வந்த வார்த்தையை கேட்டபிறகு தான், படப்பிடிப்பு என்று அறிந்து அவர்கள் ஆசுவாசப் படுத்திக் கொண்டனர். நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில், புதிய இயக்குனர் ஆர் கே இயக்கும் ‘உன்னோடு கா’ படத்தில் தான் இந்த சம்பவம் அடைந்தது. கதா நாயகனாக நெடுஞ்சாலை, மற்றும் ‘மாயா’ ஆகியப் படங்களில் கதா நாயகனாக நடித்தஆரி நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ‘டார்லிங்’ 2 கதாநாயகி மாயா.

‘ இந்த அருமையான ஊரில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு வழங்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு பெரிய நன்றி. பூலாங்குறிச்சி என்கிற இந்த அழகு கொஞ்சும் ஊர் அவருடைய சொந்த ஊர் ஆகும். இந்த ஊருக்கு அவர் பல நலத் திட்டங்களை புரிந்து இருக்கிறார். இந்த ஊரையே அவர் தத்து எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவருக்கு ஊரார் கொடுக்கும் மரியாதையில் தெரிகிறது.குடும்பத்தோடு படம் பார்க்க வருவோர் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு அருமையான படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபு சாரும் ஊர்வசி அம்மாவும் மிக பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள்.அவர்களது நடிப்பு ரசிகர்களின் விலா நோக சிரிக்க வைக்கும் என்பது நிச்சயம். எங்கள் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் பிரபு சார் தன்னுடைய செலவில் மிகப் பெரிய விருந்து வைத்தார்.படப்பிடிப்பு நடந்த நாட்கள் அத்தனையும் இனிமையான நாட்கள். ‘உன்னோடு கா’ எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இனிமையான படமாக இருக்கும் என்பது நிச்சயம்’ என்றார் ஆரி.