திருப்பதியில் சந்தானம் – ஆஸ்னா ஸவேரி திருமணம்?

Innimey-Ippadithaan-Movie-Stillsநடிகர் சந்தானத்துடன் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர் ஆஸ்னா ஸவேரி. இவர் தற்பொழுது திருப்பதிக்கு சுவாமி தரிசனத்தற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சந்தானமும் திருப்பதி சென்றிருக்கிறார். இதை அறிந்த ஒருசில ஊடகங்கள் இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்காக திருப்பதி வந்துள்ளனதாகவும், திருமணம் முடிந்துவிட்டதாகவும் வதந்தியை கிளப்பிவிட்டதாக தெரிகிறது.

இதனால் மன வருத்தம் அடைந்த ஆஸ்னா ஸவேரி , இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கோவிலுக்கு செல்வது அவரவர் தனிப்பட்ட விஷயம், எங்கள் சுதந்திரத்தில் தயவுசெய்து ஊடகங்கள் தலையிட வேண்டாம் என்றும் இந்தச் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.