தல படத்தின் டைட்டில் என்ன? தலையை பிய்த்துக்கொள்ளும் அஜீத் ரசிகர்கள்!!

ajithஆரம்பம் படத்தில் அஜீத் நடித்து வந்தபோது படப்பிடிப்பு முடியும் வரை அதன் டைட்டீலையே அறிவிக்கவில்லை. இதனால், அஜீத் ரசிகர்கள் அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று தலையை பிய்த்துக்கொண்டார்கள். கடைசியில், ஆரம்பம் என்று அறிவித்தபோது. அட இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தா நாங்க இவ்ளோ டென்சன் ஆகியிருக்க மாட்டோமில்ல என்று ரிலாக்ஸ் ஆனார்கள்.

அதன்காரணமாக, அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்தபோது, தொடக்கத்திலேயே வீரம் என்று தலைப்பை அறிவித்து விட்டே நடிக்கத் தொடங்கினார் அஜீத். ஆனால், இப்போது என்ன காரணமோ மீண்டும் அவரது 55வது படத்திற்கு தலைப்பு வைக்காமல் நடித்து வருகிறார். இதனால் மறுபடியும் ரசிக கோடிகளில் ஆர்வத்தின் உச்சத்திற்கே சென்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது நடிக்கும் படத்தில் அஜீத் சத்யதேவ் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதால். இதுதான் படத்தின் தலைப்பாக இருக்கும் என்று அஜீத்தின் ரசிகர்களே இந்த செய்தியை இணையதளங்களில் பரப்பி விட்டு வருகின்றனர். ஏற்கனவே ஆரம்பம் படத்திற்கு வலை, வலைதளம் என்று பரப்பியவர்கள் இப்போது சத்யதேவ் தான் தல படத்தின் டைட்டில் என்று அடித்து சொல்லி வருகின்றனர்.

இந்த சேதி கெளதம் மேனனின் கவனத்துக்கு செல்ல, இன்னும் தாமதித்தால் அவர்களே படத்திற்கு ஒரு புதிய கதையை சொல்லி, படத்தையே எடுத்து விடுவார்கள். அதனால் சீக்கிரமே டைட்டிலை அறிவித்து விடுவோம் என்று அஜீத்துடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.