தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு! -டி.ராஜேந்தர்

T.Rajendar at Premadasu Movie Opening Photosஒருதலைராகம். ஷங்கர் இயக்கியுள்ள மணல் நகரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசுகையில், இந்த தருணத்தில் 34 ஆண்டுகளுக்கு பின்னோக்கி என் மனம் செல்கிறது. நாயகன்-நாயகியை கடைசி வரை சுண்டு விரல்கூட தொடாமல் நடிக்க வைத்தேன். நாயகியை பேசவே விடவில்லை, மொத்த பாடலும் ஹீரோவுக்கே கொடுத்து விட்டு நாயகிக்கு ஒரு பாடல்கூட கொடுக்கவில்லை. ஆனால் கண்களால் நடித்திருந்தார் ரூபா. அந்த படத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பும் ஒரு முக்கியமானது. அதனால்தான் பெண்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்தார்கள்.

மேலும், அப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில் ஒரு கலாசாரம் இருந்தது. காதலை உயிரோட்டமாக சொல்லப்பட்ட காலம் அது. ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. ஜீன்ஸ் போடாமல் எந்த ஹீரோவும் நடிப்பதில்லை. யதார்த்தத்தை மீறி நிற்கிறது தமிழ் சினிமா. மேட்னி ஷோவில் பார்க்க ஆரம்பித்து, ஈவினிங் ஷோவில் காதலித்து, நைட் ஷோவில் காதல் கணக்கை முடிக்கிற காலமாகி விட்டது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது.

ஆனால், கேரளாவில் அப்படியில்லை. இன்றைக்கும் கலாசாரம் மாறாத கதைகளை படமாக்குகிறார்கள். அங்குள்ள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டியெல்லாம் கதைக்கேற்ப வேஷ்டி அணிந்து நடிக்கிறார்கள். பழைய சைக்கிளை ஓட்டிச்செல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் ரியாலிட்டி உள்ளது. கூடவே செண்டிமென்ட் கதைகளையும் அங்குள்ள மக்கள் ஆதரிக்கிறார்கள். அதனால்தான் மலையாள சினிமா இன்றுவரை யதார்த்தமாக வந்து கொண்டிருக்கிறது. இப்போதும் நான் நல்ல படம் பார்க்க ஆசைப்பட்டால் மலையாள படங்களைத்தான் பார்க்கிறேன் என்றார்.