தங்க மீன்கள் படத்திற்கு மற்றுமொரு விருது!

Thanga Meengal Movie First Look Wallpapers‘கற்றது தமிழ்’ புகழ் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் ஏற்கெனவே கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்போது பாண்டிச்சேரி அரசும் ‘தங்க மீன்கள்’ படத்தை சிறந்த திரைப்படமாக தேர்வு செய்துள்ளது.

இதற்கான விழா வருகிற செப்டம்பர் மாதம் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சிறந்த படத்திற்கான விருதாக 1 லட்சம் ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்படவுள்ளது. ராம் இயக்கிய இப்படத்தில் ராம், குழந்தை நட்சத்திரம் சாதனா முக்கிய கேரக்டர்களில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.