ஜேம்ஸ் கேமரூனுக்கு பிரபுதேவா கடும் கண்டனம்!

deva140514_1cஇந்தியில் அஜய்தேவ்கான், சோனாக்ஷி சின்ஹாவைக்கொண்டு பிரபுதேவா இயக்கி வரும் படம் ஆக்சன் ஜாக்சன். இந்த படத்திற்கு இந்த டைட்டில் வைக்கக்கூடாது என்று ஹாலிவுட்டில் அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு பிரபுதேவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் விடுத்துள்ள செய்தியில், பாலிவுட்டில் மோகன்குமார் என்பவர் இயக்கிய படத்தின் பெயர்தான் அவதார். இதே படத்தின் டைட்டீலில் ஜேம்ஸ்கேமரூன் தனது படத்துக்கு அவதார் என்று டைட்டில் வைத்தார். அப்படியிருக்க நான் இந்தியாவில் இயக்கியுள்ள படத்திற்கு ஆக்சன் ஜாக்சன் என்ற டைட்டில் வைக்கக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு, நான் ஆக்சன் ஜாக்சன் என்று எனது படத்துக்கு பெயர் வைத்தது தவறு என்றால், பாலிவுட்டில் வெளியான ஒரு படத்தின் டைட்டீலை இவர் தனது படத்திற்கு அவதார் என்று வைத்ததும் தவறுதான். அதனால், ஆக்சன் ஜாகசன் என்று என் படத்திற்கு டைட்டீல் வைக்கக்கூடாது என்று சொல்லும் இவர், தனது படத்திற்கு வைத்த அவதார் என்ற பெயரை மாற்றிக்கொள்ளத்தயாரா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரபுதேவா.