“ஜாக்சன் துரை”

kackso9nSRI GREEN PRODUCTIONS, M.S.SHARAVANAN அதிக பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்து வழங்கும், தமிழின் முதல் PERIODICAL பேய் படமான ஜாக்சன் துரை இன்று இனிதே துவங்குகிறது.

சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன் முறையாக HOLLYWOOD நடிகர் ZACHERY அறிமுகமாகிறார்.

HOLLYWOOD- இல் மிகப்பெரிய வெற்றி பெற்ற CONJURING படத்தின் ஒப்பனை தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தபடுகிறது.
தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்குகிறார், ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், படத்தொகுப்பை இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கவனித்துக்கொள்கிறார். கலை T.N. கபிலன், EXECUTIVE PRODUCER அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், PRODUCTION CONTROLLER M.பூமதி, LINE PRODUCER செல்வா, PRODUCTION MANAGER C.பாலமுருகன் PRO நிகில், மற்றும் இவர்களுடன் பல தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 – ல் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருள் செலவில் மிக பிரமாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஜாக்சன் துரை திகிலும், நகைசுவையும் கலந்த பிரம்மாண்ட படமாக உருவாகிறது.