ஜகா வாங்கிய கே.எஸ்.ரவிக்குமார் !

mhjsQtcdajhஅஜீத் நடித்த சில படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தபோது கூடிய சீக்கிரமே விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டி விடுவார்கள் என்றுதான் கோடம்பாக்கத்தில் கருத்து நிலவி வந்தது. ஆனால், அதையடுத்து அஜீத் நடித்த சில படங்கள் தொடர் ஹிட்டடிக்க, இப்போது அஜீத், விஜய் இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்பது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது.

இதன்காரணமாக மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் பேஸ்புக்கில் கடுமையாக மோதிக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் ஒரு வார பத்திரிகை தாங்கள் நடத்திய வாக்கெடுப்பில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று செய்தி வெளியிட, கோடம்பாக்கமே ஆடிப்போனது. இதனால் அவர்களது ரசிகர்கள் இன்னும் கடுமையாக மோதிக்கொண்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில், ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது எனக்கு ஆசையில்லை என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டார். ஆனால் அதையும் அவர் அஜீத்தை குறி வைத்தே பேசியதாக செய்திகள் வெடித்து சிதறின. இப்படி களோபரம் வெடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத்தான் என்று கே.எஸ்.ரவிக்குமார் ஒரு செய்தி வெளியிட விஜய்யின் அபிமானிகள் ஆவேசமாகி விட்டனர்.

ஆனால், இந்த செய்தியை லிங்கா படப்பிடிப்பில் இருந்த கே.எஸ்.ரவிக்குமார் கேள்விப்பட, உடனடியாக அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார். விஜய்வை வைத்து மின்சார கண்ணா, அஜீத்தை வைத்து வில்லன் படங்களை இயக்கியிருக்கிறேன்.அந்த வகையில், அவர்களை ஒரு ரசிகனாக ரசித்திருக்கிறேன்.

மற்றபடி, இந்த சூப்பர் ஸ்டார் கலவரத்திற்குள் நான் வரவில்லை. அதைப்பறறி நான் யோசித்தது கூட இல்லை. யாரோ எனது பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி இப்படி அறிவித்து பிரச்னையை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதனால் தயவு செய்து யாரும் இந்த சூப்பர் ஸ்டார் சண்டையில் என்னை சேர்க்காதீர்கள் என்று செய்தி விடுத்துள்ள ரவிக்குமார், தற்போதைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குவதில்தான் எனது முழுக்கவனமும் உள்ளது என்று ஜகா வாங்கி விட்டார்.