சொல்வதெல்லாம் உண்மையால் ஒரு நபர் தற்கொலை!

downloadஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகிவரும் சொல்வதெல்லாம் உண்மை பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான நாகப்பன் – ரேணுகா விவகாரம் ஒரு உயிரை பலியாக்கும் அளவுக்கு செல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ரேணுகா நாகப்பனை பற்றி பல அவதூறு, பெற்ற மகள் மீதே பாலியில் ரீதியான குற்றங்களை பற்றி சொல்லியுள்ளார், இதை நாகப்பன் அழுத்தமாக மறுத்துள்ளனர். ஆனால் இவர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் முன்னிலையில் பேசியதை இவர்களுக்கே தெரியாமல் படம்பிடித்து ஒளிப்பரப்பியுள்ளனர்.

இதை கண்டு நாகப்பன் அதிர்ச்சியடைய உடனே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தொலைபேசியில் அழைத்து நிறுத்த சொல்லியுள்ளார். ஆனால் மறுபடியும் அதை மறுநாள் மதியமும் ஒளிபரப்பு செய்துள்ளனர். இதனால் அக்கம்பக்கத்தினர் அவரை தவறாக பார்க்க மனரீதியில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளார்.

இன்று நாகப்பன் தற்கொலைக்கு காரணமான ரேணுகா மற்றும் அவருடைய மகள்கள், சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஒளிபரப்பு செய்த ஜி தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகப்பனின் மகள் ராதிகா புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகப்பன் மீது பொலிசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.