செளந்தர்யாவை கெட்ட வார்த்தைகளால் திட்டிய சிம்பு ரசிகர்கள்!

Soundarya Rajinikanth Latest Photosகோச்சடையான் படத்தை பற்றி கருத்து சொன்ன சிம்பு, ஹாலிவுட் அளவுக்கெல்லாம் படம் இல்லை என்று கூறியிருந்தார். இதனால் அப்படத்தின் டைரக்டரான செளந்தர்யா செம டென்சனாகி விட்டார். அதையடுத்து, விஜய் டி.வியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பாடாதே சிம்பு நிறுத்திடு என்று ஒரு கேள்விககு பதிலளிக்கையில் கூறியிருந்தார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் கொதித்து விட்டனர். செளந்தர்யாவின் டுவிட்டருக்குள் சென்று அவரை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டித்தீர்த்துள்ளனர். அதோடு எங்கள் கடவுள் சிம்புவைப்பறறி அப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சாடியிருந்தார்களாம்.

இதை எதிர்பார்க்காத செளந்தர்யா, உடனடியாக மன்னிப்பு தெரிவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.