சாமி 2’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

images-1மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தில் இருந்து பிரபல தெலுங்கு நடிகை ராகுல் ப்ரித்திசிங் விலகினார் என்ற வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் அவர் விக்ரம் நடிக்கவுள்ள ‘சாமி 2’ படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாக கடந்த 2 நாட்களாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த செய்தியை ராகுல் ப்ரித்திசிங் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘சாமி 2′ படக்குழுவினர் என்னை அணுகவும் இல்லை.

நான் அந்த படத்தில் நடிக்க ஓப்பந்தமாகவும் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்கள் எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை’ என்று கூறி இது குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.மேலும் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மைதான்.

ஆனால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் படம் மற்றும் தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக் படம் ஆகியவற்றின் கமிட்மெண்ட் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.