சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு…

201610190844071841_diabetes-problem_secvpfசர்க்கரை சாப்பிடாதீர்கள், சாப்பிடாதீர்கள் என ஓயாது கூறும் காலமாகி விட்டது. எடை கூடுவதும் அதனால் ஏற்படும் சர்க்கரை நோயும் மற்ற பாதிப்புகளும் மிகப்பெரிய பிரச்சினை என வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் வெள்ளை சர்க்கரை எப்படி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கின்றது. எலும்புகளில் உள்ள தாது உப்புகளை திருடி விடுகின்றது என்பதனைப் பற்றியும் மேலும் அறிந்தால் நேரடி சர்க்கரை, இனிப்பினை மக்கள் நன்கு தவிர்த்து விடுவார்கள்.

இனிப்பு சுவை என்பது அவசியம்தான். நம் முன்னோர் அறுசுவை என சுவையினை பிரிக்கும் பொழுது இனிப்பு சுவையினையும் வலியுறுத்தி உள்ளனர். உணவின் முடிவில் இனிப்பு உண்டாலே உணவு உண்ட திருப்தி ஏற்படுகின்றது. இனிப்பு என்றாலே வெள்ளை சர்க்கரைக்குத்தான் நாம் அதிகம் பழகி உள்ளோம்.

கார்பன், ஹைடிரஜன், ஆக்ஸிஜன், சர்க்கரை (சுக்ரோஸ்) இது தான் கார்போஹைடிரேட். இந்த சுக்ரோஜ் ப்ரக்டோஸ், க்ளூகோஸ் என பிரிவு படுகின்றது. பொதுவில் சுக்ரோஸ் எல்லா தாவர வகைகளிலும் உள்ளது. பழங்களிலும் உள்ளது. அதிக இனிப்பு கொண்ட பழங்களை கூட மிக அதிகம் உட்கொண்டால் பூஞ்ஞை பாதிப்பு ஏற்படும். புளிப்பு சத்து கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களே அநேகருக்கு ஏற்றது.

வெள்ளை சர்க்கரை அதிகம் பதப்படுத்தப்படும் பொழுது அதில் சிறிதளவும் சத்து இல்லாமல் உள்ளது. பலருக்கு இனிப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. கன்டிடா எனும் ப்ங்க் நுண்கிருமி மக்கள் உடலில் இருக்கும். நமது நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இது ரத்தத்தில் பெருகி உயிரிழப்பு வரை கொண்டு செல்லும். ஆக சர்க்கரை அதிக அளவு என்பது நமக்குத் தெரியாத பல விஷயங்களில் பிரச்சினை ஏற்படுத்தி விடும்.

ஆக சர்க்கரையினை தவிர்க்க இருக்கும் காரணங்கள்.

* கன்டிடா கிருமி பாதிப்பிற்கு காரணமாகின்றது.
* தசைகளில் சுருக்கமும் வயதான தோற்றமும் ஏற்படும்.
* ரத்தத்தினை ஆசிட் தன்மையாக்கி விடும்.
* எலும்புகள் கரைந்து சீறுநீரில் செல்ல காரணமாகின்றது.
* பற்களை கழட்டி விடும்.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்.
* எடை கூடும்
* இனிப்பு அடிமைத் தனத்தினை ஏற்படுத்தும்.
* அடிக்கடி சாப்பிடச் சொல்லும்.
* சத்தில்லாமல் போகும்.

* சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகும்.
* உடலின் தாது உப்புக்களைத் திருடி விடும்.
* சக்தி இல்லாது உறிஞ்சி விடும்.
* இருதய பாதிப்பு ஏற்படும்.
* புற்று நோய் பாதிப்பு ஏற்படலாம்.

* வயிற்றில் புண் ஏற்படலாம்.
* பித்தப் பையில் கற்கள் உருவாகலாம்.
* அட்ரினல் சுரப்பியினைச் சோர்வடையச் செய்யும்.
* நோய் எதிர்ப்புச் சக்தியினை வெகுவாய் குறைக்கும்.
* கண் பார்வை மங்கும்.

* முதுமை சீக்கிரம் வரும்.
* எக்ஸிமா போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம்.
* மூட்டு பாதிப்புகள் ஏற்படலாம்.

எலுமிச்சை சாறு, புளிப்பு வகை சார்ந்தது. இதனை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது சர்க்கரை வேண்டுமென்ற அடங்கா ஆசை வெகுவாய் குறையும். சுக்ரோஸ், க்ளூகோஸ், ப்ரக்டோஸ் மூன்றுமே முக்கியமான கார்போ ஹைடிரேட்டுகள். இதனை இனிப்பு – சர்க்கரை என்கிறோம். இதனை உங்கள் நாக்கு சுவையால் வித்தியாசம் காட்டாது. ஆனால் உடல் இந்த மூன்னுக்குமான வித்தியாசத்தினைச் சொல்லும். இந்த மூன்று வகை சர்க்கரைகளுமே ஒரே அளவான சக்தி தான் கொடுக்கும். ஆனால் இந்த மூன்றும் உடலில் கிரகிக்கப்படும் விதமும், செயல்படுத்தப்படும் விதமும் வித்தியாசமானது.

க்ளூகோஸ் உடலுக்குத் தேவையான ஒன்று. ரத்தத்தில் உள்ள சர்க்கரை நீங்கள் உண்ணும் கார்போ ஹைடிரேட் உணவு உடனடி க்ளூகோஸாக மாறி சக்தி அளிக்கும். அல்லது திசுக்களிலோ, கல்லீரலிலோ சேமித்து வைக்கப்படும். இன்சுலினே திசுக்கள் க்ளூகோஸ் எடுத்துக் கொள்ள உதவுகின்றது.

ப்ரக்டோன் இயற்கையாகவே பழங்கள், காய்கறிகளில் இருப்பது. இதன் வளர்சிதை மாற்றம் வேறு படுவது. இதன் சக்தியினை மூளையோ, தசை திசுக்களோ அவ்வளவு உகந்ததாக எடுத்துக் கொள்வதில்லை. ப்ரக்டோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கல்லீரல் அவசியமாகின்றது. அதிகமான ப்ரக்டோஸ் சக்தி இயக்கத்தில் முறையான கட்டுப்பாடு இல்லாதது.

அதிகமான பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களில் ப்ரக் டோஸ் இருக்கும். இதனை அதிகமாக எடுத்துக் கொள்வது நார்சத்து மிகுந்த கார்போ ஹைடிரேட் போல் நன்மை பயக்காது. சுக்ரோஸ் என்பது நமது சாப்பாட்டு மேஜையில் உள்ள சர்க்கரை கரும்பு மற்றும் இயற்கையாகவே சிறிதளவு காய்கறி பழங்களில் இருப்பது. இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது இது உடலில் க்ளூகோசி, ப்ரக்டோஸ் என பிரிக்கப்பட்டு வளர்சிதை மாற்றம் அடைகின்றது.

அளவான முறையில் சர்க்கரையினை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் மிக சிலரே. அநேகர் குறைந்தது 500 கலோரி சத்து அளவுள்ள சர்க்கரையினை எடுத்துக் கொள்கிறோம். நம்மை அறியாமலேயே நம் உடலை நாம் கெடுத்துக் கொண்டு இருக்கின்றோம்.

உலகளவில் சர்க்கரையின் தாக்குதல்களை பற்றிய ஆய்வு விரிவாக மேற்கொள்ளப்பட்டது. இருதய செயலிழப்பிற்கு அதிக சர்க்கரையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இள வயதில் அதிக எடையும் தொப்பையும் கடந்த 20 வருடங்களில் பன் மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களின் உணவில் கூடுதல் சர்க்கரையே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்கரை அமைதியாய் ஒருவரை கொன்று விடும். 2008-ல் இதற்கான மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது.

லெப்டின் எனும் ஹார்மோன் நாம் உண்ணும் பொழுது நமக்கு உணவு போதும் என்பதனை உணர்த்தும். ஆனால் சர்க்கரையின் அளவு கூடும் பொழுது இந்த லெப்டின் கவலை செய்யாது இருந்து விடுகின்றது. இதன் காரணமாக ஒருவர் அகமாகவே உண்டு எடை கூடி விடுவார். இது உயிருக்கே ஆபத்தாகி விடுகின்றது.

* சர்க்கரை மதுவினைப் போல் கல்லீரலுக்குத் தீங்கு விளைவிப்பது.

* அதிக சர்க்கரை நம் மூளையின் செயல் திறனை குறைத்து விடும்.

* எடையை கூட்டுவதில் இதற்கே முதலிடம். ஒரு கிராம் ஏதாவது இனிப்பு (அ) குக்கீஸ் போன்றவற்றில் 4 கலோரி என்றால் 1 கி ஆரஞ்சு சுளையில் 2 கலோரி சத்து இருக்கும். காரணம் அதிலுள்ள நார்சத்தும், நீரும் தான்.

* ஆகவேத் தான் நார்சத்து உணவு ரத்தத்தில் வேகமாக சர்க்கரை அளவினை ஏற்றாது. இதன் காரணமாகவே முழு தானிய உணவு வலியுறுத்தப்படுகின்றது.

* அதிகம் பாலிஷ் செய்யப்பட்ட சர்க்கரை மிக வேகமாய் ரத்த சர்க்கரையை உயர்த்தி விடும்.

* பாலிஷ் செய்யப்படாத இனிப்புகள் குறிப்பிட்ட அளவில் நமக்குத் தேவை. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரேயடியாக கொலை பட்டினி இருக்காதீர்கள். தேவையான அளவு சர்க்கரை உடலில் இல்லை என்றால் உங்களால் செயலாற்ற முடியாது. சோர்ந்து இருப்பீர்கள்.

* குறைந்த அளவு சர்க்கரை, ஸ்வீட் சாப்பிடுவது நிறைந்த ஆயுளைத் தரும்.

* பழங்களை உண்ணும் பொழுது நிறைந்த நார்சத்தும், வைட்டமின்களும் உட்கொள்கிறோம்.

அவை வெள்ளை சர்க்கரை போல் உடனடி ரத்தத்தில் சர்க்கரை அளவை வெகுவாய் கூட்டாது. பப்பாயா, கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்கள் சிறந்தவை. ஆனால் பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளும் பொழுது நீங்கள் நார்சத்தினை இழந்து விடுகின்றீர்கள். ஆகவே பழங்களை கடித்துக் சாப்பிடுங்கள்.

போதை பொருள் போல் சர்க்கரைக்கும் நாம் அடிமையாகி விடும் வாய்ப்பு உண்டு. ஸ்வீட் சாப்பிட்டால் ஒரு வித மகிழ்ச்சி ஏற்படுவதால் இந்த அடிமைத்தனம் வந்து விடும். கவனம் தேவை.

குழந்தைகளை இன்றிலிருந்தே அதிக சர்க்கரை கொண்ட சாக்லேட், பிஸ்கட் சாப்பிடுவதிலிருந்து காப்பாற்றி விடுங்கள். ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகின்றதா. பழம் ஓரிரு துண்டுகள் சாப்பிடுங்கள். வீட்டில் ஸ்வீட் சம்பந்தப்பட்ட பொருட்களே இல்லாமல் செய்து விடுங்கள். ஆரோக்யமான வாழ்க்கையே வாழ்க்கை என்பதனை உணருங்கள்.