சரவணனின் பலவீனம் மீனாட்சிக்குதான் தெரியுமாம்..!

10513கடந்த சில வருடங்களாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் – மீனாட்சி பெரும்பாலானோர்களை கவர்ந்த ஒரு தொடர். இந்த தொடரில் முதன்முதலாக சரவணன், மீனாட்சியாக நடித்த செந்தில்-ஸ்ரீஜா ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் இந்த ஜோடி கலந்து கொண்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய செந்தில், ‘முதல்வன்’ படத்தில் வடிவேலுக்கு இடுப்பு ஒரு பலவீனமாக இருப்பது போல எனக்கு ஒரு பலவீனம் இருக்கின்றது. அந்த பலவீனத்தை பயன்படுத்தி ஸ்ரீஜா பல காரியங்களை சாதித்துள்ளார் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பலவீனம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.