சரத்குமார் படத்தில் சமுத்திரகனி!

sandamaruசென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது. இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பிராமையா, வெண்ணிறாடை மூர்த்தி, சிங்கம் புலி, காதல் தண்டபாணி நளினி, டெல்லிகணேஷ் , மோகன் ராம், ஜி.எம்.குமார், சந்தான பாரதி, ஆதவன், சூப்பர் குட் கண்ணன், ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், அருண் சாகர், கானா உலகநாதன், பர்பி ஹேண்டே ஆகியோர் நடிக்கிறார்கள் .

இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார். ஒளிப்பதிவு – N.S.உதய்குமார் / இசை – ஜேம்ஸ்வசந்தன் பாடல்கள் – மோகன்ராஜ், சுமதிஸ்ரீ / எடிட்டிங் – V.T. விஜயன் / கலை – ரூபேஷ் ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா / நடனம் – கல்யாண், விஷ்ணு தேவா / தலைமை செயல் அதிகாரி – பா.சக்திவேல் / தயாரிப்பு ஒருங்கினைப்பு – A.N.சுந்தரேசன் / தயாரிப்பு மேற்பார்வை – வினோத் சபரீசன் தயாரிப்பு – R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன். வசனம் எழுதி இயக்குகிறார் – A.வெங்கடேஷ் .இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. சமீபத்தில் சரத்குமார் – ஓவியா பங்கேற்ற

“ உன்னை மட்டும் சுத்த வச்சியே – உன்
பேர கத்த வச்சியே ! எனக்குள்ளே பேச வச்சியே!

உனை மொத்தம் வாங்க வச்சியே ! என்ற பாடல் காட்சி பாங்காக்கில் படமாகப்பட்டது. இந்த பாடல் காட்சியை பிரபல இந்திப் பட டான்ஸ் மாஸ்டரான விஷ்ணு தேவா நடனம் அமைக்கப் படமாக்கப்பட்டது.

சண்டமாருதம் படத்தை பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் …. இது கமர்ஷியல் படம். நல்ல கதைக்களம்! திறமையான கதாநாயகன் மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள். சின்சியரான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டு முயற்சியால் “ சண்டமாருதம்” பேசப்படும் படமாக இருக்கும் என்றார் இயக்குனர்.