சமந்தாவை ‘பிகினி’ உடை அணிய வைத்தது யார் ?

sa‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவைப் பற்றி பேசுகிறார்களோ இல்லையோ, இயக்குனர் லிங்குசாமியைப் பற்றிப் பேசுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக சமந்தாவைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பதில்லை. தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு ஹீரோயின் ஆட்சி செய்வார்கள். ஒரு காலத்தில் ஜோதிகா, அதன் பின் மீரா ஜாஸ்மின், பின்னர் அசின், நயன்தாரா, அஞ்சலி என பரபரப்பாக பேசப்படுவார்கள். ஒரு சில காலம் வரை மட்டுமே அவர்கள் பெயர் செய்திகளில் அடிபடும். அதன் பின் அந்த இடத்தை வேறு ஒரு ஹீரோயின் பிடித்து விடுவார். அடுத்தவர் வரும் வரை அவர்தான் ‘கோலிவுட் குயின்’ ஆகவே கொண்டாடப்படுவார்.

அந்த இடத்தை இப்போது சமந்தா பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மணிரத்னத்தின் ‘கடல்’, ஷங்கரின் ‘ஐ’ படங்களில் முதலில் நடிக்க சமந்தாவைத்தான் கேட்டார்கள். ஆனால், அப்போது அவருக்கு இருந்த சில உடல் ரீதியான பிரச்சனைகளால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின்தான் ‘அஞ்சான்’ படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படம் ஆரம்பமான சில நாட்களிலேயே சமந்தாவின் சரும நோய் பிரச்னை காரணமா அவரை அந்தப் படத்திலிருந்து தூக்கிவிட்டதாக செய்திகள் பரவின. ஆனால் அதைப் பொய்யாக்கும் விதத்தில் சமந்தாவை படு கிளாமராக ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைத்து அந்தப் புகைப்படங்களை மீடியாக்களில் பரவவிட்டார்கள். அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை அந்தப் புகைப்படங்கள் மறைமுகமாக உணர்த்தின.

அப்போது எடுக்கப்பட்ட பாடல் காட்சியில்தான் சமந்தா ‘பிகினி’ உடையில் நடித்தாராம். இப்போது அந்தக் காட்சி அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமந்தா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை நம்பித்தான் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க சம்மதித்தாராம். அவர் அந்த உடையில் தன்னை ஆபாசமாகக் காட்டாமல் கண்டிப்பாக அழகாகக் காட்டுவார் என்ற நம்பிக்கையில்தான் அந்த உடையணிந்து நடிக்க சம்மதித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.