கொஞ்சும் தமிழில் மிஞ்சும் நாயகி – ‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா!

casandraகல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து வெளிவரும் இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா. பாடகி நடிகையென தனது கலைப்பயணத்தை தொடங்கியிருக்கும் கெஸான்ட்ரா, தனது முதல் படத்தில் நேர்ந்த சுவையான அனுபவங்களை பகிர்கிறார்.

“ வானவில் வாழ்க்கை படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘வினிதா’ ஒரு பாடகி எனக்கு. நான் பாடியுள்ள ‘Super girl’ பாடல் அனைவரையும் கவரும். இப்பாடலுக்கு பிறகு எனது நண்பர்கள் அனைவரும் என்னை ‘Super girl’ என்றே அழைக்கிறார்கள். அவர்களின் எண்ணத்திற்கு ஈடேற்றும் வண்ணம் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன்.” என கூறினார் கெசான்ட்ரா.

“இப்படத்தின் மூலம் தமிழ் நன்றாக கற்றுகொண்டேன். நடிப்பு, ஆட்டம் என எனக்கு அனைத்தையும் கற்றுகொள்ளும் இடமாய் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த ஜேம்ஸ் சார் மற்றும் Ocenaa AJR சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது நன்றிகள். பாடுவதுதான் எனக்கு மிக பிடித்தமான விஷயம், நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன்“ எனக் மென்குரலின் கொஞ்சும் தமிழில் கூறினார் பாடகி/நாயகி கெசான்ட்ரா.