கே.பாக்யராஜைக்கண்டு தெறித்து ஓடும் இளவட்ட இயக்குனர்கள்!

K.Bhagyaraj at Haridas Movie Audio Launch Photosஇந்திய அளவில் சிறந்த திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர்தான் கே.பாக்யராஜ். ஆனால், அவரது கதைகளே சமீபகாலமாக சோடைப்போய்ககொண்டிருக்கிறது. அதனால் அவரை நம்பி படமெடுக்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை.ஆக, சில படங்களில் கிடைக்கிற வேடங்களில் நடித்து வருகிறார் பாக்யராஜ்.

ஆனால், அப்படி அவர் நடிக்கும் படங்களின் கதையை கேட்கும் அவர், பின்னர் ஸ்பாட்டுக்கு சென்றதும் அப்படங்களின் டைரக்டர்களை அழைத்து இதை அப்படி மாற்று, அதை இப்படி மாற்று என்று நிறைய திருத்தம் செய்து கொடுக்கிறாராம். அவர்களும், மூத்த இயக்குனராயிற்றே என்று அவர் சொல்வது போல் கதையில் திருத்தம் செய்து கொள்கிறார்களாம்.

அப்படி அவர் திருத்தம் செய்த படங்களில் ஒன்றுதான் பாலசேகரன் இயக்கிய, ஒருவர் மீது இருவர் சாய்ந்து. இந்த படத்தில் கே.பாக்யராஜ் மட்டுமின்றி ஒரு நீதிபதி வேடத்தில் நடித்திருந்த டைரக்டர் விசுவும் சேர்ந்து கொண்டு படத்தின் க்ளைமாக்ஸை ஆளுக்கொரு பக்கமாக இழுத்து கிழித்தெறிந்து விட்டார்களாம். அந்தவகையில் அந்த படம் டர்டர்ரானதற்கு ேம்றபடி இயக்குனர்களே முக்கிய காரணகர்த்தாக்களாம்.

குறிப்பாக, இந்த முருங்கைக்காய் டைரக்டரால் பாதிக்கப்பட்ட இயக்குனர்கள் பலர் கோடம்பாக்கத்தில் உள்ளார்கள். அதனால் இப்போது அவர் வருகிறார் என்றாலே எகிறி குறித்து வேறு பக்கம் தெறித்து ஓடுகிறார்கள் இளவட்ட இயக்குனர்கள். ஆக, இதன்காரணமாக தற்போது அவர் நடிக்க வேண்டிய கேரக்டர்கள் வேறு நடிகர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.