கோச்சடையான் படம் பார்த்த கமல்!

kamal-kochadaiiyaanரஜினியும், கமலும் வெளியில் தொழில்முறை போட்டியாளர்களாக தெரிந்தாலும், நிஜத்தில் அவர்கள் நல்ல நணபர்கள். அவரது திறமையை இனனொருவர் தட்டிக்கொடுத்துக்கொள்ளும் மனப்பக்கும் கொண்டவர்கள். அநத வகையில், கமல் நடிக்கிற படங்களை அவ்வ்பபோது பார்த்துவிட்டு தனது கருத்தினை அவரிடத்திலேயே பதிவு செய்வார் ரஜினி. அதேபோல, கமலும் ரஜினி படங்களை பார்த்து விட்டு கருத்து சொல்வார்.

இப்படி அவர்கள் நட்பு வளர்த்து வரும் நிலையில், தற்போது இந்திய அளவில் முதன்முறையாக மோசன் கேப்டர் தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. எப்போதும் புதுமைகளை வரவேற்று செய்யத்துடிக்கும் கமல், ரஜினியின் இந்த படத்தை நேற்று பார்த்து ரசித்திருக்கிறார்.

அவர் கோச்சடையானை பார்க்க வேண்டும் என்று சொன்னதும், அவருக்கு பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் படத்தின் டைரக்டர் செளந்தர்யா. அதையடுத்து படத்தைப்பார்த்த கமல், புதிய தொழில்நுட்பமும், ரஜினியை அதில் காண்பித்திருக்கும் விதமும் பிரமாதமாக உள்ளது என்று மனதார பாராட்டி விட்டு சென்றிருக்கிறார். கமலின் பாராட்டில் நெகிழ்ந்து போயிருக்கிறார் டைரக்டர் செளந்தர்யா ரஜினி அஸ்வின்.