கெளதம்மேனனுடன் நட்பு வளர்த்த சூர்யா!

suryaசூர்யாவை வைத்து காக்க காக்க என்ற படத்தை இயக்கிய கெளதம்மேனன், அதையடுத்து வாரணம் ஆயிரம் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே ஹிட்தான். மூன்றாவதாக துருவநட்சத்திரம் என்ற படத்தில் அவர்கள் இணைவதாக இருந்தது. அப்படத்திற்கான பூஜை நடந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாக அறிவித்தவர்கள் பின்னர் கதை விசயத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் பிரிந்து விட்டனர். அதனால் துருவநட்சத்திரம் ஒளிராமல் உதிர்ந்து போனது.

அதையடுத்து சூர்யா அஞ்சான், மாஸ், 24 படங்களில் நடித்து விட்டு இப்போது சிங்கம்-3யில் இறங்கி விட்டார். கெளதம்மேனன், என்னை அறிந்தாலைத் தொடர்ந்து இப்போது அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், இனிமேல் சூர்யாவும், கெளதம்மேனனும் இணைய வாய்ப்பே இல்லை என்கிற நிலைதான் இருந்தது வந்தது. ஆனால் விரைவில் சூர்யாவை வைத்து தான் ஒரு படம் இயக்கயிருப்பதாக தற்போது கூறி வருகிறார் கெளதம்மேனன். ஆக, சிங்கம்-3க்கு பிறகு சூர்யாவை அவர் இயக்கக்கூடும் என்று தெரிகிறது.

மேலும், துருவநட்சத்திரம் நின்றுபோன பிறகு சூர்யா-கெளதம்மேனன் இரு வரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை என்று செய்திகள் வெளியானபோதும், சில படங்களின் ஆடியோ விழாக்களுக்கு வந்த இடத்தில் கெளதம்மேனனை அவரது இருக்கைக்கு தேடிச்சென்று வணக்கம் சொல்லிவிட்டு தான் வேறு இடத்தில் போய் அமர்ந்தார் சூர்யா. ஆக, அவர்களுக்கிடையே சிறு மனஸ்தாபம் ஏற்பட்டபோதும், அது நீடிக்கவில்லை. கெளதம்மேனனுடனான நட்பை தொடர்ந்து வந்தார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.