கெளதம்மேனனின் கதையை அவுட் பண்ணிய உதவி இயக்குனர்!

Gautham-Menonநீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு கெளதம்மேனனின் இயக்கத்தில் விஜய், சூர்யா என சில நடிகர்கள்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், இவர் சொன்ன கதை அவர்களுக்கு பிடிக்காததால் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.

அதையடுத்து, கஷ்டப்பட்டு ஒரு கதையை ரெடி பண்ணி அஜீத்திடம் சொன்னார். அவர் கால்சீட் கொடுத்தார். விளைவு, இப்போது அப்படத்தின் படப்பிடிபபு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில, கெளதம்மேனனின் டைரக்டர் யூனிட்டில் இருந்த ஒரு உதவி இயக்குனருக்கும், அவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட, அவர் படத்தின் கதையை பேஸ்புக்கில் எழுதி பப்ளிசிட்டி செய்து விட்டார்.

இந்த சேதி கெளதம்மேனனின் காதுக்கு செல்ல செம டென்சனாகி விட்டார். அதனால் அந்த உதவி இயக்குனரை தனது யூனிட்டில் இருநது உடனடியாக தூக்கி எறிந்த கெளதம், தற்போது கதையில் சில பல திருத்தங்களை செய்கிறாராம்.