கெமிக்கல் கலந்த உணவுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம்…!

dr priya bsms– சித்த மருத்துவர் பிரியா (பிஎஸ்எம்எஸ்)

 

சமீபகாலமாக மனித சமுதாயத்தை அதிகமாக பாதித்து வரும் நோய்களில் ஒன்று புற்று நோய். இந்நோய் எதனால் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் என்னென்ன தீர்வு உள்ளது என்பதை பற்றி சித்த மருத்துவர் பிரியா நமது வாசகர்களுக்காக கூறுகிறார்…

புற்று நோய் என்பது அயல்நாட்டு உணவு வகைகள் காரணமாக அதிகமாக உருவாகிறது. ஏனென்றால் அயல்நாட்டு உணவுகளில் கெமிக்கல் அதிகமாக கலந்துள்ளன. அந்த கெமிக்கலானது உடம்பில் தங்கி விடுகிறது. நாளடைவில் அதுவே கட்டிகளாக தோன்றுகிறது. சராசரியாக நூற்றில் பத்து பேருக்கு இந்த புற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால்தான் என்னிடம் வரும் நோயாளிகளிடம் அயல்நாட்டு உணவுகள் மற்றும் துரித உணவுகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் அட்வைஸ் கொடுத்து வருகிறேன்.

உடம்பில் ஏற்படும் எல்லா கட்டிகளுமே கேன்சர் கட்டிகளா?

எல்லா கட்டிகளுமே கேன்சர் கட்டிகள் அல்ல. சாதாரண கட்டிகளும் உண்டு. ஆனால் அதைகூட சிலர் கேன்சர் என்று சொல்லி பணம் சம்பாதிக்கும் நிலையும் இன்றைக்கு நடந்து வருகிறது. அதனால் சரியான மருத்துவர்களை அணுகி முறையான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதோடு, தங்களுக்கு வந்திருப்பது கேன்சர் கட்டிகள்தானா? என்பதை வீட்டில் இருந்தபடியே பரிசோதனையும் செய்து கொள்ளலாம். அதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன. அதை நான் என்னிடம் வரும் பெண்களிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

அதாவது. மாதவிடாய் வந்து 8-வது நாளில் மார்பகத்தில் சில டெஸ்ட்டுகள் பண்ண வேண்டும். அப்போது கேன்சர் கட்டிகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை சுயபரிசோதனையிலேயே தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகியிருந்தால், மார்பகத்தின் தோலுக்கு உள்ளே கோதுமை அளவில் சின்னச்சின்ன கட்டிகள் தென்படும். அப்படி கண்டறிந்ததுமே உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால், அது கேன்சர் கட்டிகளாக இருப்பின் ஆரம்பத்திலேயே கரைத்து விடலாம்.

மேலும், நான் மருத்துவராகி 8 ஆண்டுகளில் இதுவரை 3 புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்திருக்கிறேன். அதாவது மூன்றாவது ஸ்டேஜில் இருந்து 2வது ஸ்டேஜ்க்கும், 2வது ஸ்டேஜில் இருந்து முதல் ஸ்டேஜ்க்கும் கொண்டு வந்து தள்ளிப்போட்டிருக்கிறேன். பெரும்பாலும் கேன்சர் பாதிப்புக்கு ஆளாகி ஒரு வருடத்திற்குள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அவர்களை காப்பாற்ற அதிகமான வாய்ப்பு உள்ளது.

உணவுகள் தவிர வேறு என்னென்ன பாதிப்புகளால் புற்றுநோய் வருகிறது?

இடைவெளி இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்வது. அதிகப்படியாக வெள்ளைப்படுதல், அதிக ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுதல் என பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும், கர்ப்பபையில் ஏதேனும் கட்டி இருந்தால் சாதாரண கட்டிகள் என்று கவனிக்காமல் விட்டுவிட்டால், அதுவே நாளடைவில் புற்று நோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

புற்று நோய்க்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளதா?

இந்த புற்று நோயானது மூன்று ஸ்டேஜ்கள் உள்ளது. அதில் முதல் ஸ்டேஜிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து விட்டால் குணப்படுத்தி விடலாம். அதற்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. ஆனால் அதற்கடுத்த ஸ்டேஜ்கள் என்கிறபோது இறப்பை தள்ளி போடலாம். மற்றபடி உயிரை காப்பாற்ற முடியாது. மேலும், இந்த நோயானது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக தாக்குகிறது.

மேலும், சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை எல்லா நோய்களுக்குமே நிரந்தர தீர்வு உண்டு. ஆனால் இந்த மருந்து படிப்படியாகத்தான் குணப்படுத்தும். அதேசமயம், குணமான நோய் எக்காரணம் கொண்டும் திரும்ப வராது. அந்த அளவுக்கு சித்த மருத்துவம் சிறப்பான மருத்துவமாகும் என்கிறார் சித்த மருத்துவர் பிரியா.