குத்துப்பாட்டால் ‘சாமி 2’ பட வாய்ப்பை இழந்த நயன்தாரா!

malayalam-actress-nayantara-new-pictures-04சூர்யா நடிப்பில் ‘சிங்கம் 3’ படத்தை இயக்கி வரும் ஹரி, அடுத்து விக்ரம் நடிக்கவுள்ள ‘சாமி 2’ படத்தை இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா மற்றும் நயன்தாரா நாயகிகளாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை தற்போது ஹரிக்கு நெருக்கமான தரப்பு மறுத்துள்ளது.

கோலிவுட்டில் ‘அய்யா’ படத்தின் மூலம் நயன்தாராவை அறிமுகப்படுத்தியதே ஹரிதான். ஆனால் விஜய், தனுஷ் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நயன்தாரா தனது ‘சிங்கம் 2’ படத்தில் நடனமாட மறுத்துவிட்டார்.

இதனால் ஹரி இனிமேல் தனது படத்தில் நயன்தாராவை புக் செய்வதில்லை என முடிவெடுத்துவிட்டதாகவும் இதன் காரணமாக ‘சாமி 2’ படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.