‘களம்’

kappalசராசரி மனிதனின் கற்பனைக்கு எட்டாத உண்மைகள் அமானுஷய்ம் என்று தான் அழைக்கப்படும் . இந்த பாணியில்பல்வேறு படங்கள் தயார் ஆனாலும் , கதை களம் படத்தின் தரத்தை மெருகேற்றும். ‘களம்’ படத்தின் கதை களத்தைபற்றிய கதை தான் என்பதே சிறப்பு. இயக்குனர் ஜீவா ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராபர்ட் எஸ் ராஜ்’களம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.அருள் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் பி கே சந்திரன்தயாரிக்கும் ‘களம்’ ஒரு குறுகிய கால தயாரிப்பு ஆகும்.Arri Alexa cooke S 4i என்ற அதி நவீன ஒளிப்பதிவு சாதனம் மூலம் ‘களம்’ படத்தை படமாக்குகிறார் ஒளிபதிவாளர் முகேஷ். பிரகாஷ் நிக்கி என்ற புதிய இசை அமைப்பாளர் ‘களம்’படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

‘களம்’ ஒரு களத்தை பற்றிய கதை.ஒரு விலை மதிப்பிட முடியாத குறிப்பிட்ட ஒரு மாளிகையை பற்றிய கதை.ஸ்ரீனி,அம்ஜெத், லக்ஷ்மி ப்ரியா, மது சூதனன் மற்றும் பேபி ஹியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ‘களம் ‘

படத்தின் கதை, திரைக்கதை ,அமைத்து வசனம் இயற்றுபவர் சுபீஷ்.