கமல் பாடிய சூப்பர் ஹிட் பாட்டு!

kamal pattuமுற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார். விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில், கௌரவ் ஹீரோவாக நடிக்க, கன்னட நாட்டை சேர்ந்த காவ்யா ஷேட்டி ஹீரோயினாக நடிக்கும் படம் அவம். சாதாரண வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும் கார்த்திக், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை சந்தித்ததும், அந்த பெண்ணால் அவன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா சம்பங்களும், அந்த சம்பவத்தால் நிகழும் நிகழ்வுகளே படத்தின் கதை.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில், நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். மதன் கார்கியின் பாடல் வரிகளுக்கு, சுந்தரமூர்த்தியின் இசையில், கமல்ஹாசன் தனது இனிமையான குரலால் உணர்ச்சிபூர்வமாக பாடியிருக்கிறார். ஒரு இளைஞனின் தனிமையையும், கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் விதமாக இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கமல் பாடியிருக்கும் இந்தப்பாடல் நிச்சயம் ரசிகர்களை கவருவதுடன், சூப்பர் ஹிட்டாகும் என்கின்றனர் படக்குழுவினர்.