ஐயங்கன் என்றால் அமாஷயம் என்று பொருளாம்!

sd“நஸ்மா பிக்சர்ஸ்” சார்பில் அயாஸ்கான் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் “ஐயங்கன்”. இயக்குநர் தனுஷ்பாண்டியன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை – பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் நடைபெறுகிறது, படத்தின் நாயகனாக நௌசத்கான் மற்றும் நாயகியாக பூர்ணிமா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
“ஐயங்கன்” என்பது நம்மை சுற்றியிருக்கும் ஒரு அமானுஷ்யம் என்ற பொருளாகும், பெரிய மந்திரவாதியாக வேண்டுமென்ற ஆசையில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருக்கும் பெண்ணை தேடி அப்பெண்ணை நரபலி கொடுக்க திட்டம்போடுகிறான் ஒரு மந்திரவாதி. அதன்படி ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து அந்த பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி செய்கிறான் அந்த மந்திரவாதி, படத்தின் நாயகன் நவ்ஷத் கான் பெரிய மேஜிக் மேனாக இருக்கிறார் விலை உயர்ந்த பைக்கை வாங்கிக் கொண்டு அதில் நாயகி பூர்ணிமாவுடன் சேர்ந்து சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலா செல்கிறார்கள் 3 காதல் ஜோடிகள், போன இடத்தில் நாயகி பூர்ணிமாவை அந்த மந்திரவாதி கடத்திவிடுகிறான்.
மந்திரவாதியால் கடத்தப்பட்ட  தன் காதலியை நாயகன் எப்படி அவனுக்கு தெரிந்த மேஜிக்கை வைத்து மீட்கிறானா இல்லையா? என்பதுதான் மீதி கதை.