எமி ஜாக்சனை அல்டிமேட் பியூட்டி என்கிறார் பி.சி.ஸ்ரீராம்!

emiசங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம் கதாநாயகனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் தான் எடுத்த எமிஜாக்சனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பற்றி அவர் கூறும்போது, ‘எமிஜாக்சன் அல்டிமேட் பியூட்டி. ‘ஐ’ படத்தில் இவருடைய கதாபத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருந்திருக்க மாட்டார்கள். கடைசி நிமிடத்தில் தான் இவர் நடிப்பது உறுதியானது’ என்று கூறினார்.

‘ஐ’ படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.