உதவி இயக்குனர்களை கவுரவித்த கேபிள் சங்கர்…!

cableபிரபல திரை விமர்சகர் கேபிள் சங்கர் இயக்கி வரும் திரைப்படம் தொட்டால் தொடரும். தமன் – அருந்த்தி ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூ ட்யூபில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காதல் ஆக்ஷன் சென்ட்டிமென்ட் சேசிங் என்று சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் தயாராகியிருக்கும் தொட்டால் தொடரும் படத்தின் ட்ரெய்லரில் ஒரு விசேஷம்…

இதுவரை தமிழ்ப்பட ட்ரெய்லர்கள் எதிலும் அப்படத்தின் உதவி இயக்குனர்களின் பெயர்கள் இடம் பெற்றதில்லை. ஆனால் முதன் முறையாக தன் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களின் பெயரையும் இந்த ட்ரெய்லரில் இடம் பெற வைத்து அவர்களுக்கு கவுரவம் தேடிக் கொடுத்திருக்கிறார் கேபிள் சங்கர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும், உதவி இயக்குனர்களை மேடையேற்றி அவர்களை கவுரவித்தவர் கேபிள் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக அதிக பொருட் செலவில் இப்படத்தை தயாரித்திருப்பவர் துவார் சந்திரசேகர்.