இளையராஜா பிறந்த நாளில் 71 ஆயிரம் மரக்கன்றுகள்!

Ilayaraja Latest Stillsகடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற்ற இசை விழாவின்போது தனது ரசிகர் மன்றத்தை திறந்தார் இளையராஜா. அதையடுத்து உலகமெங்கிலுமுள்ள அவரது ரசிகர்கள் சுமார் 1 கோடி பேர் தற்போது இளையராஜாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துளளார். அதையடுத்து, சமூகத்திற்கு தனது சார்பில் ஏதாவது நல்லதை இந்த மன்றம் மூலம் செய்ய வேண்டும் என்று களமிறங்கியுள்ளார் இளையராஜா.

அதன் முதல்கட்டமாக, ஜூன்-2-ந்தேதி தனது பிற்நத நாள் என்பதால், அன்று தமிழகத்தில் பல இடங்களில் மரம் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் இளையராஜா. இது அவரது 71 வது பிறந்த நாள் என்பதால், 71 ஆயிரம் மரக்கன்றுகளை நடப்போகிறர்களர். அதோடு அவற்றை நடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் வளர்த்து பாராமரிக்கும் பொறுப்பினையும் இளையராஜ’ாவின் ரசிகர் மன்றத்தின் ஏற்றுக்கொள்கிறார்களாம்.

இதுபோன்று மக்களுக்கு பயன்படும் பல விசயங்களை தொடர்ந்து தனது ரசிகர் மன்றங்கள் மூலம் செய்யவிருக்கிறாராம் இளையராஜா.