இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார் !

தெலுங்கு இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகை பூனம் கவுர். நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் கோலிவுட் வந்தவர் பூனம் கவுர். உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி, 6, என் வழி தனி வழி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெடி படத்தில் விஷாலின் தங்கையாக நடித்திருந்தார் பூனம்.

 

தெலுங்கு இயக்குனர் ஒருவர் தன்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி தனக்கு பட வாய்ப்புகள் வராதவாறு செய்வதாக பூனம் கவுர் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த இயக்குனர் தனக்கு பிடித்த நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்பு வரும்படி செய்கிறார். அதில் ஒரு நடிகை தொடர்ந்து தோல்விப் படங்களை அளித்தும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று பூனம் ட்வீட்டியுள்ளார்.

அந்த இயக்குனர் என் படத்தை இயக்க முயற்சி செய்தார். அப்போது அவர் ஓவராக நடந்து கொண்டார். அவருக்கு பிடித்த நடிகைகள் மட்டுமே சினிமா துறையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என பூனம் தெரிவித்துள்ளார்.

அந்த இயக்குனர் பற்றி வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் எல்லாம் உள்ளது. நடிக்கும் ஆசையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. வேறு விஷயங்கள் செய்பவர்களுக்கு கிடைக்கிறது என்கிறார் பூனம். அவர் வேறு விஷயம் என்று கூறியது படுக்கைக்கு செல்வதை தான் என்று கருதப்படுகிறது.

அந்த இயக்குனர் போன்ற ஆட்களை கர்மா சும்மா விடாது என்கிறார் பூனம். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்வதை தான் பூனம் சுற்றி வளைத்து கூறுகிறார் என்று கூறப்படுகிறது.