இன்டர்நெட்டில் நடிகைகள் குளியல் காட்சி! – சஞ்சனா சிங் பாய்ச்சல்

sanjana-600x300சில்க ஸ்மிதா, அனுராதா என கவர்ச்சி ஆட்டத்துக்கென்றே 89, 90 களில் கிளாமர் நடிகைகள் இருந்தனர். இப்போதெல்லாம் ஹீரோயின்களே கவர்ச்சி, குத்து பாடலுக்கு ஆடத் தயாராகிவிட்டதால் கிளாமர் நடிகைகள் என்ற பிரிவே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

கறிவேப்பிலைபோல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டுபேரில் சஞ்சனா சிங் ஒருவர். ரேணிகுண்டா, கோ, அஞ்சான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கிளாமர் ஆட்டம் போட்டவர். அவர் கூறியது:கவர்ச்சியை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால் இப்போது எடுபடாது என்பதை புரிந்துவைத்திருக்கிறேன். அதனால்தான் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதில் கொஞ்சம் நடிப்புக்கும் தீனி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

சமீபத்தில் வெளியான மீகாமன் படத்தில் கால்கேர்ளாக நடித்ததில் பாராட்டு கிடைத்தது. ‘நமீதாவுக்கு போட்டியாக வந்திருக்கிறீர்களா?’ என்கிறார்கள். அவர் என்னுடைய சீனியர். அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதை நான் பின்பற்றுவதில்லை. எனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டால்தான் எனக்கு பெயர் கிடைக்கும். இல்லாவிட்டால் நமீதா மாதிரி நடித்திருக்கிறார் என்று கூறிவிடுவார்கள். எந்த நடிகைக்கும் தனித்தன்மை முக்கியம் என்று கருதுகிறேன். சமீபகாலமாக இணைய தள வரம்பு மீறல்கள் அதிகரித்துவிட்டது.

நடிகைகளின் ஆபாச படங்களை மார்பிங் செய்தும், குளிக்கும் காட்சிகளையும் திருட்டுத்தனமாக படமாக்கி வெளியிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் அவர்களின் அக்கா, தங்கை, மனைவி பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் குளிக்கும்போது படம் எடுத்து வெளியிட்டால் அவர்கள் மனது என்ன பாடுபடும். மற்றவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்.இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.