இனியா நடிக்கும் இனி வரும் நாட்கள் “

sdassமலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் “இனி வரும் நாட்கள் ” MJD புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முழுக்க , முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள் . ஒரு இடத்தில் கூட ஆண்கள் நடிக்கவில்லையாம் .

இனியா , ஆர்த்தி , சுபிக்சா , ஈடன் , அர்ச்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் . முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார்கள் .

டாக்குமெண்டரி எடுக்க போகும் கல்லூரி மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும் , அதை தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சிகளும் , சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைக்கதையாக அமைத்திருக்கிறோம் .
பெண்களுக்கு நடிப்பில் முக்கியத்துவம் எல்லா படங்களிலும் கிடைத்து விடுவதில்லை , ஆனால் இந்த படத்தில் முழுவதுமே பெண்கள் மட்டும் நடிப்பதால் , அவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு வாய்ப்பாக
அமைந்திருக்கிறது … பாட்டு , சண்டை காமெடி என்று பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் நிறைய இருக்கிறது ..

படத்தில் கதாநாயகிகள் இருக்கிறார்கள் கதாநாயகன் எங்கே ? என்று கேட்டதற்கு படத்தின் திரைக்கதையே நாயகன் ,என்று சொல்கிறார் இயக்குனர் துளசிதாஸ் ..படப்பிடிப்பு கம்பம் , நாகர்கோவில் , தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது ..
தயாரிப்பு – எம் . ஜே .டி புரொடக்சன் .

இயக்கம் – துளசி தாஸ்
ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர்
கதை – மனோ ரஞ்சித்
வசனம் -துரைபாண்டி
இசை – எம் ஜி ஸ்ரீ குமார்
நடனம் -கூல் ஜெயந்த்
சண்டை பயிற்சி – மாபியா சசி
கலை – ஜஸ்டீன்
தயாரிப்பு நிர்வாகம் – அமிர்தா மோகன் .
பி ஆர் ஓ – குணா .