இந்தியில் படம் இயக்குகிறார் விஷ்ணுவர்தன்!

vishnuஅறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் இப்பொழுது ஆர்யா மற்றும் கிருஷ்ணாவை வைத்து “யட்சன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் ஒரு இந்திப்படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பை தெரிவிப்பதாகவும் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.