இது நம்ம ஆளு.

simbuமூன்று வருடங்களுக்கு ஒரு நடிகரின் படம் வெளி வரவில்லை.ஆனாலும் அவருடைய படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்து முத்திரைப் பதிக்கிறது.இது அவர் பிறவி சூப்பர் ஸ்டார் ஆக இருந்து இருந்தாலோ, அல்லது அவர் பெயர் எஸ் டி ஆர் ஆக இருந்தால் மட்டுமே சாத்தியம். இளம் ரசிக ரசிகைகளின் இதய துடிப்பை துல்லியமாக கணித்து வைத்து இருக்கும் எஸ் டி ஆருக்கு இந்த வருடம் தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளிவரும் என்பதுக் குறிப்பிட தக்கது.இந்த வருடம் அவரது திரை பயணத்தில் முக்கியமானது எனக் கருதப் படுகிறது.’இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் டீசர் அவரது ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று இருக்கிறது.தன மனதில் பட்டதை சரி என்று பட்டென உடைத்திடும் எஸ் டி ஆருக்கு அந்த குணத்துக்காக கூடிடும் ரசிகர் கூட்டம் ஏராளம்.அந்த வகையில் ‘இது நம்ம ஆளு’ டீசரில் வரும் எஸ் டி ஆரின் வசனங்களுக்கும் , அவரை குறித்த வசனங்களுக்கும் ஏராளமான வரவேற்ப்புக் கிட்டியது.
‘ என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி. இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்ப்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலபடுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்’ என்று தன்னம்பிக்கை கண்ணில் மிளிர கூறினார் எஸ் டி ஆர்.